மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூர் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை 10.40 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால், அருகில் உள்ள பல கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலை அனுமதி இன்றி இயங்கி வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.

‘‘ஒரே இடத்தில் அதிக பட்டாசுகளை சேமித்து வைத்ததே விபத்துக்கு காரணம் என மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமல் அந்த ஆலை இயங்கி வந்துள்ளது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்று மேற்கு வங்க உணவுத் துறை அமைச்சரும், அப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ரதின் கோஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்