ஆகஸ்ட் 25-ல் இந்தியா - பாகிஸ்தான் பேச்சு

இந்தியா - பாகிஸ்தான் வெளி யுறவுத் துறை செயலாளர்கள் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி, இஸ்லாமாபாத்தில் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் புதன் கிழமை வெளியிட்டுள்ளன. முன்ன தாக, இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கும், பாகிஸ்தான் வெளி யுறவு செயலாளர் அய்ஸாஸ் அகமது சவுத்ரியும் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசினர்.

கடந்த மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நவாஸ் மோடி சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் பேச்சு நடத்தி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாரிகள் நிலையிலான கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும்.

இது தொடர்பாக இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “அய்ஸாஸ் அகமது சவுத்ரியிடம் தொலைபேசியில் பேசிய சுஜாதா சிங், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தும் விவகாரத்தை எழுப்பினார். இதுபோன்ற சம்பவங்கள் பேச்சுவார்த்தைக் கூட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக இருக்கும் என்று சுஜாதா சிங் கூறினார்.

எல்லையில் தாக்குதல் நடந்து வரும்போது, இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியாது. எல்லை யில் அமைதியை பேணும் போதுதான், பாகிஸ்தான் மீது நம்பகத்தன்மை வரும் என்றும் சுஜாதா சிங் கூறினார்” என்று தெரிவித்தார்.

பேச்சு நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இருதரப்பு நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்ற இருநாடுகளின் பிரதமர் களின் எண்ணத்தின் அடிப் படையில், பலனளிக்கத் தக்க வகையில் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த வெளியுறவுத் துறை செயலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE