“தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கலாம் என அமித் ஷா பகல் கனவு காண்கிறார்” - பிஆர்எஸ் கட்சி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அடுத்த சில மாதங்களில் தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சிகள் தனித்தனியே ஆட்சியை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகல் கனவு காண்கிறார் என பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த ரவுலா ஸ்ரீதர் ரெட்டி தெரித்துள்ளார். நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் இதுவரை (கடந்த 2014 முதல்) இரண்டு முறை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (இப்போது பிஆர்எஸ்) இரண்டு முறையும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் முதல்வராக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என அமித் ஷா பகல் கனவு காண்கிறார். இங்கு ஆட்சிக்கு வரலாம் என்பதை மறந்து விடுங்கள். தேர்தலில் ஐந்து இடங்களுக்கு குறைவாகவே சீட் வெல்வீர்கள். பாஜக இங்கு சீட் எண்ணிக்கையில் ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாது” என ரவுலா ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார். கடந்த 2018 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுப்லி ஹில்ஸ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் ரவுலா ஸ்ரீதர் ரெட்டி. 2020-ல் அந்த கட்சியில் இருந்து விலகி பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE