சிபாரிசு கடிதம் மூலம் வழங்கும் திருப்பதி லட்டு, வடை விலையேற்றம்: பக்தர்கள் அதிருப்தி

By என்.மகேஷ் குமார்

சிபாரிசு கடிதங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு, வடை பிரசாதங்களின் விலை இன்று முதல் பன்மடங்கு உயர்ந்தது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்த பின்னர், லட்டு பிரசாதம் வாங்க அலைமோதுவது வழக்கம். உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதம், 3 வகைகளாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்யாண உற்ஸவ லட்டு, சாதாரண லட்டு, சிறிய லட்டு என 3 வகைகளாக இந்த லட்டுப் பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தரிசனம் செய்த பக்தர்களுக்கு சிறிய லட்டு இலவசமாகவும், சாதாரண லட்டு ரூ. 25க்கும், கல்யாண உற்ஸவ லட்டு ரூ 100க்கும் வழங்கப்படுகிறது.

ஆனால், லட்டுப் பிரசாதத்தின் விலையை உயர்த்த தேவஸ்தானம் கடந்த ஒரு ஆண்டாகவே முயற்சித்து வந்தது. ஆனால், முதல்வர் சந்திரபாபு நாயுடு இதனை ஒப்புக்கொள்ளாததால், சாமானிய பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் விலையை தேவஸ்தானம் உயர்த்தவில்லை.

ஆனால் சிபாரிசுக் கடிதங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் லட்டு, வடைகளின் விலையை இன்று முதல் தேவஸ்தானம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தியுள்ளது. கோயிலுக்குள் ‘வகபடி’ எனும் இடத்தில் விநியோகம் செய்யப்படும் சிபாரிசு கடித லட்டு, வடை பிரசாதங்களின் விலை இன்று காலை முதல் பன் மடங்கு உயர்த்தப்பட்டது.

இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ. 25க்கு வழங்கப்பட்ட சாதாரண லட்டு ரூ. 50க்கும், ரூ. 25க்கு விநியோகம் செய்யப்பட்ட வடை ரூ. 100க்கும், ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்ட கல்யாண உற்ஸவ (பெரிய) லட்டு ரூ. 200க்கும் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தார்மீக அமைப்புகளுக்கும் இதே விலையில் தேவஸ்தானம் விற்பனை செய்தவதாக ஏற்கெனவே அறிவித்தது. இந்த திடீர் விலையேற்றத்தால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விலையேற்றத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென கருத்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்