திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தனியார் இணையதளங்களில் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் போன்றவைகளை முன்பதிவு செய்து, திருமலைக்கு வருகின்றனர். இதனால், பக்தர்கள் அவர்களுக்கு சவுகரியமான நாட்களில் சுவாமியை விரைவில் தரிசனம் செய்து கொள்ள முடிகிறது. ஆனால், சில தனியார் இணையதளங்கள் மூலம் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதின் மூலம் கூடுதலாக பணம் வாங்குவதாக சில பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளுடன் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 சிறப்பு கட்டணம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், தங்கும் அறை போன்றவற்றுக்காக www.ttdsevaonline.com என்ற இணையதளத்தை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் தேவஸ்தான தகவல்களுக்கு www.tirumala.org என்கிற இணைய தளத்தை பக்தர்கள் பயன்படுத்தலாம். ஆனால் தனியார் இணைய தளங்களை பயன்படுத்துவதின் மூலம் கூடுதலாக பணம் செலவாகிறது என பக்தர்கள் புகார் தெரித்துள்ளனர். அது போன்ற இணையதளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தேவஸ்தான இணையதள சேவை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago