எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே யுத்தநிறுத்த விதிமுறைகள் அமலில் உள்ள இடங்களில் இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை சுட்டுக்கொன்று அழித்துள்ளதாக வந்துள்ள செய்தியை பாக். ராணுவம் மறுத்துள்ளது
ஒரு ராணுவ மேஜரும் மூன்று ராணுவ வீரர்களும் பீர் பஞ்சால் பள்ளத்தாக்கில் ராஜவ்ரி எனும் இடத்தில் உள்ள இந்தியா பாக். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே நேற்று (சனிக்கிழமை) ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பாக். மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவிக்கையில், ''உடல்கள் அழிக்கப்படவில்லை. ரோந்துப் பணியில் ஈடுபட்ட எதிரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது உடலில் சிராய்ப்புகள் ஏற்படுத்திய காயத்தினால் பாதிப்பு நீடித்து வருகிறது'' என்று மறுத்துள்ளார்.
பாக். எல்லை நடவடிக்கைக்குழு (BAT) துப்பாக்கிச்சூடு நடவடிக்கை காரணமாக இறப்புகள் ஏற்பட்டன, அந்த உடல்கள் மோசமாக சிதைக்கப்பட்டன என்று வதந்திகள் பரவிவருகின்றன.
கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் சீக்கியப் படைப்பிரிவுகளிலிருந்து ராஜவ்ரியின் சிங்கூஸ் பகுதியில் பணிமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் மேஜர் மோஹர்கர் பிரஃபுல்லா அம்பாதாஸ், ராணுவ துணை அதிகாரி குர்மீத் சிங், சிப்பாய் பர்கத் சிங்க மற்றும் சிப்பாய் குர்மீத் சிங் ஆகியோர் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது,
இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும், 'வலுவாகவும் திறம்படமாகவும்' பதிலடி கொடுத்ததாக ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவின் தாயும் மனைவியும் இஸ்லாமாபாத்தில் அவரைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த ஒரு நாள் முன்பு இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஜாதவ் உளவுப்பணியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago