நொய்டா கால் சென்டர் மீது நிதி மோசடி புகார்: 84 ஊழியர்களை கைது செய்தது போலீஸ்

By செய்திப்பிரிவு

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் ஒரு கால் சென்டர் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேஸ் 1 காவல் நிலையப் பகுதியில் செயல்படும் அந்த கால் சென்டரில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான கணினிகளை போலீஸார் கைப்பற்றினர். அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் உட்பட 84 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். கால் சென்டரின் ஆவணங்கள் மற்றும் கால் சென்டர் மூலம் நடந்த மோசடிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE