அனைத்தும் நார்மல்; ஆராய்ச்சியைத் தொடங்கியது பிரக்யான் ரோவர்! - இஸ்ரோ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பிரக்யான் ரோவர் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட ஆறு மணி நேரம் கழித்து இந்த நிகழ்வு நடந்தது.

இதனிடையே, சந்திரயான்-3 மிஷன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடப்பதாகவும், அனைத்து சிஸ்டம்களும் நார்மலாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது என்றும் சந்திரயான்-3 ரோவரின் மூன் வாக் தொடங்கியது! என்று இஸ்ரோ

பிரக்யான் ரோவர் சந்திரனின் மேற்பரப்பின் கனிமங்களை பகுப்பாய்வு செய்வது உட்பட பல சோதனைகளை 14 நாட்கள் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE