சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் இடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தேர்வு செய்தது எப்படி?

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: சந்திரயான்-1 சந்திரயான்-2 ஆர்பிட்டர்கள், ஜப்பானின் செலீன் ஆர்பிட்டர், அமெரிக்காவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் லேசர் அல்டிமீட்டர் (லோலா ) ஆகியவற்றின் படங்களை வைத்து சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தேர்வு செய்தனர்.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இதர நிறுவனங்களின் விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நிலவின் தென் துருவ பகுதியில் 4 கி.மீ நீளம், 2.4 கி.மீ அகலத்தில் தடைகள் அற்ற மேற்பரப்பை மூவிங் விண்டோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்தனர். நில அமைப்பு, சறுக்கல், வெளிச்சம், இடையூறு அற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 20 இடங்களை, நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமிராக்கள், செலீன் ஆர்பிட்டர் ஆகியவற்றின் படங்களை வைத்து விஞ்ஞானிகள் குழுவினர் தேர்வு செய்தனர்.

இந்த 20 இடங்களில் இருந்து, விரிவான ஆய்வுக்காக சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள ஓஎச்ஆர்சி கேமிராவின் அதிக தெளிவான படங்கள் மூலம் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் அமிதாப், சுரேஷ், அஜய் கே பிரஷார் மற்றும் அப்துல்லா சுகைல் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE