பெங்களூரு: கடந்த மார்ச் மாதம், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வந்திருந்தார். முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
இந்நிலையில், தற்போது அவர் தனது இந்தியப் பயணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.இதன்படி, இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருடன் எடுத்துக் கொண்ட படத்தை லிங்க்டு இன் தளத்தில் பகிர்ந்து, “இந்தியாவுக்கான எனது பயணத்தில் மாற்றத்திற்கான சக்தியை நான் சந்தித்தேன்: குசுமா. தனது உள்ளூர் அஞ்சல் துறையில் அதிசயங்களைச் செய்யும் குறிப்பிடத்தக்க இளம் பெண்’’ என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
குசுமா, பெங்களூருவில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்பேங்க் கிளையில் அஞ்சலராகஉள்ளார். அவர் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கி சேவையை கொண்டு சேர்ப்பதை பாராட்டிய பில் கேட்ஸ், “இந்தியா டிஜிட்டல் கட்டமைப்பில் முன்னுதாரண நாடாக உள்ளது. குசுமா போன்ற அஞ்சல் துறை ஊழியர்கள் மூலம் டிஜிட்டல் வங்கி சேவை மக்களுக்கு கொண்டுசேர்க்கப்படுகிறது. குசுமா நிதி சேவையை மட்டுமல்ல, நம்பிக்கையையும் சேர்த்தே அவரது சமூகத்துக்கு வழங்குகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago