ஆதார் அட்டை இருந்தால் 2 மணி நேரத்தில் தரிசனம்: திருப்பதியில் சோதனை அடிப்படையில் புதிய முறை அமல்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசிக்க புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் சுவாமியை 2 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம்.

திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 50 முதல் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதில் 50 சதவீதத்தினர் சர்வ தரிசனம் மூலமாக சுவாமியை தரிசிக்கின்றனர். ஆனால் இவர்கள், வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சோதனை முயற்சியாக ‘ஸ்லாட் சர்வ தர்சனம்’ (எஸ்எஸ்டி) என்ற புதிய முறையை கடந்த 18-ம் தேதி அறிமுகப்படுத்தியது. வரும் 23-ம் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த முறை அமலில் இருக்கும். ஆதார் அட்டை உள்ள சாமானிய பக்தர்கள் அனைவரும் இந்த முறையில் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

‘ஸ்லாட் சர்வ தரிசனம்’ முறையை அமல்படுத்த திருமலையில் 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 117 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் ஆதார் அட்டை வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டும் ‘ஸ்லாட் தரிசனம்’ முறைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதன்படி குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் சென்று வெறும் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் வழக்கம்போல் வரிசையில் சென்று சுவாமியை தரிசிக்கலாம். இந்த தரிசன முறைக்கு தொடர்ந்து பக்தர்களிடையே ஆதரவு கிடைத்தால், இந்த முறையையே தொடர்ந்து பின்பற்ற தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்