ஏழுமலையானை சர்வ தரிசனம் மூலம் தரிசிக்க திருமலைக்கு செல்லும் பக்தர்கள், இனி வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அறைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பக்தருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இத்திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகமெங்கிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகையும் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதாரண நாட்களில் 55 முதல் 65 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் சுவாமியை தரிசிக்கின்றனர்.
இதுவே, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, துவாதசி, ஆங்கில புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுகின்றனர்.
இதில், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ரூ. 300 சிறப்பு தரிசனம் முறைகள் நடைமுறையில் உள்ளன. மேலும், விஐபி பிரேக் தரிசன சேவை, உட்பட ஆர்ஜித சேவைகள் மூலமாக பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து கொள்கின்றனர். அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் இரவு 12.30 மணி வரை ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது. 2 மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது. ஆயினும் பக்தர்கள் பல மணி நேரம் வரை சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக தர்ம தரிசனம் எனப்படும் சர்வ தரிசன முறையில் விரைவில் தேவஸ்தானம் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. இதுகுறித்து திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 5 அல்லது 6 நாட்களில் தரிசனத்திற்கான நேரம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் பக்தர்களின் கருத்துகளை கேட்டறிந்து, இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த தீர்மானிக்கப்படும். இதன் மூலம் சர்வ தரிசன பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தெலுங்கு, கன்னடம், தமிழ் தேவஸ்தான இணைய தளத்திற்கு பின்னர், விரைவில் ஹிந்தியில் இணைய தள சேவை அறிமுகப்படுத்தப்படும்.
2018-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்கு பக்தர்களிடையே வழக்கம்போல் வரவேற்பு அதிகமாக உள்ளது. இவற்றை ttdsevaonline.com என்கிற இணைய தளம் முகவரி மூலம் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். இம்முறை ஃபிளிப் கார்ட் மூலமாகவும் தேவஸ்தான காலண்டர்கள், டைரிகளை பக்தர்கள் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அனில் குமார் சிங்கால் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago