ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கென 3,840 குடியிருப்புகள் கட்டப்படும் என ஆந்திர மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச் சர் நாராயணா தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாகி வருகிறது. இதை ஒரு முன்மாதிரியான நகரமாக உருவாக்கி வருகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அமராவதியில் உள்ள ராயபூடி பகுதியில் எம்எல்ஏக்கள், ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்படும் இடத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன், இந்திய கலாச்சாரமும் தெலுங்கு கலாச்சாரமும் இருக்கும்படி அமராவதி நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அமராவதியில் 3,840 அரசு குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்காக 81 லட்சம் சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 61 டவர் குடியிருப்புகள் கட்டப்படும்.
எம்எல்ஏக்களுக்காக 432 குடியிருப்புகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக 132 குடியிருப்புகளும் ஒதுக்கப்படும். அமராவதியில் ஏழை மக்களுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வாஸ்துப்படி வீடு கட்டித் தரப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago