சந்திரயான்-3 லேண்டரை நிலவுக்கு  வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர்

By செய்திப்பிரிவு

சென்னை: சந்திரயான் 3 லேண்டரை தொடர்புகொண்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் அதனை நிலவுக்கு வரவேற்றுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய கடந்த 2019-ல் இந்தியா சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. ஆனால் சந்திரயான் 2-ன் லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் , திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா செலுத்தியது.

இதன் லேண்டர் நாளை நிலவில் இறங்க உள்ள நிலையில், நிலவை சுற்றிக் கொண்டிருக்கிற சந்திரயான் 2 ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.முன்னதாக சந்திரயான் 3 லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவுக்கு வரவேற்றது.

சந்திரயான் 2-கும், தற்போது அங்கு சென்றுள்ள சந்திரயான்-3 லேண்டருக்கும் தகவல்தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘Welcome, buddy!’ (வருக நண்பா) என லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் வரவேற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பின்னர் இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்