காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து அம்மாநில விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு காவிரி ஆற்றில் 10 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதற்குபாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 67 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரத்து 576 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில், கடல்மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2281.60 அடியாகஉள்ளது. அணைக்கு விநாடிக்கு1911 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 6 ஆயிரத்து 825 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக‌ விநாடிக்கு 22 ஆயிரத்து 401 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேகேதாட்டு அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக விவசாய அமைப்பினர் நேற்று ரங்கப்பட்ணா அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய விவசாயிகள், ‘கர்நாடக‌ அணைகளில் போதிய நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீரை திறக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது' என எதிர்ப்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்