திருமலை திருப்பதியில், காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்த ஜனவரி மாதம் முதல் 60 பேட்டரி கார்களை தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனப் போக்குவரத்தால் திருமலையில் காற்றில் மாசு கலப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் காற்றில் மாசு இல்லாமல் இருக்கவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரைவில் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, திருமலை அன்னமைய்யா பவனில் நடந்த ‘டயல் யுவர் இஓ’ எனும் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகேட்கும் நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில், ”திருச்சானூர் பத்மாவதித் தாயார் கோயிலுக்குள் பக்தர்களை ஸ்ரீவாரி சேவகர்கள் தள்ளுகின்றனர்” என ஹைதராபாத்தை சேர்ந்த லட்சுமி எனும் பக்தர் குற்றம் சாட்டினார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரி அணில் குமார் சிங்கால் பதிலளித்தார்.
அத்துடன் ஸ்ரீவாரி சேவகர்கள் பக்தர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓங்கோலில் இருந்து மஸ்தான் வலி எனும் பக்தர் கூறும்போது, நானும் என் குடும்பத்தாரும் ஏழுமலையானின் தீவிர பக்தர்கள். ஆனால் நாங்கள் திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது, நாங்கள் முஸ்லீம்கள் என்பதால் தேவஸ்தான ஊழியர் தங்கும் அறை வழங்க வில்லை. இதனால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்தோம். என புகார் தெரிவித்தார். மாற்று மதத்தினர் திருமலைக்கு வர எந்த தடையும் இல்லை. இம்முறை வரும் போது அதேபோன்று நடந்து கொண்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அணில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
உண்டியல்காணிக்கையைஎண்ணநவீனஇயந்திரம்
திருமலையில் ஏழுமலையானுக்கு உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது. தினமும் ரூ. 2.5 முதல் 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்தப் பணத்தை எண்ணுவதற்கு விரைவில் நவீன இயந்திரம் வாங்கப்படுமென அணில் குமார் சிங்கால் தெரிவித்தார். மேலும் இவர் நேற்று தேவஸ்தான அதிகாரிகளுடன் ‘சிலா தோரணம்’ சக்கரதீர்த்தம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 150 கோடி வருடம் பழமையான ‘சிலா தோரணம்’ உள்ள இடத்தை பக்தர்கள் காணும் விதத்தில் ‘வ்யூ பாயிண்ட்’ அமைக்க அணில் குமார் சிங்கால் உத்தரவிட்டார்.
நவம்பரில் 79.34லட்சம்லட்டுபிரசாதம்விநியோகம்
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஏழுமலையானைத் தரிசித்த பக்தர்களுக்கு 79,34,652 லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மாதத்தில் 20,55,952 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 41,28,363 பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பரில் ரூ. 82 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago