பிஹாரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரின் அராரியா மாவட்டம், ராணிகஞ்ச் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் விமல் குமார் யாதவ் (35). இவர் 'டைனிக் ஜாக்ரன்' நாளிதழில் உள்ளூர் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார். விமல் குமார், கதவை திறந்தபோது அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

தகவல் அறிந்த போலீஸார், விமல் குமாரின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். கொலைக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து தலைவரான விமல்குமாரின் சகோதரர் இதே முறையில் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் முக்கிய சாட்சியாக விமல்குமார் இருந்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.

எனவே இதற்காகவும் விமல்குமார் கொல்லப்பட்டி ருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பத்திரிகையாளர் கொலை தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். உரிய விசாரணக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம், பிஹாரில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதை காட்டுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்