தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்னாப்பிரிக்கா குடியரசு தலைவர் ஹெச்.இ. மட்டமேலா சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில் வரும் ஆகஸ்ட் 22- 24ம் தேதிகளில் அந்நாட்டில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் நபர் பிரிக்ஸ் உச்சி மாநாடு இது.

இதனிடையே, பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பின்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்" என்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, ஜோகன்னஸ்பர்க்கில் சில முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார். தென்னாப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் 25ம் தேதி அன்று பிரதமர் மோடி கிரீஸ் நாடுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளில் அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE