ஓடும் ரயிலில் உயர் அதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ஆர்பிஎப் வீரர் பணிநீக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த மாதம் ஓடும் ரயிலில் உயர் அதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ஆர்பிஎப் வீரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஜூலை 31-ம் தேதி மும்பையின் புறநகர் பகுதியான பால்கர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயில்வே பாதுகாப்புப் படைவீரர் (ஆர்பிஎப்) சேத்தன் சிங் சவுத்ரி(34) துப்பாக்கியால் சுட்டதில் உயர் அதிகாரி டிக்கா ராம் மீனா, 3 பயணிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து அரசு ரயில்வே போலீஸார் சவுத்ரியை கைதுசெய்தனர். அவர் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சவுத்ரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

சேத்தன் சிங் சவுத்ரி பணிநீக்கம் தொடர்பான உத்தரவை ஆர்பிஎப் முதுநிலை மண்டல பாதுகாப்பு ஆணையர் கடந்த 14-ம் தேதிபிறப்பித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் சவுத்ரி 3 முறை ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE