புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். மொழி உட்பட எந்த வகையிலும் பிரிவினைக்கு இடம் அளிக்கக்கூடாது. மணிப்பூர் மக்கள் கண்ணீர் சிந்தினால் மகாராஷ்டிர மக்களுக்கு வலிக்கிறது. அசாமில் வெள்ளம் ஏற்பட்டால் கேரள மக்கள் பதறுகின்றனர். இதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு.
இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஜி-20 முதல் சந்திரயான் உள்ளிட்ட விண்வெளி திட்டங்கள் வரை பெண்கள் தலைமையேற்று வழிநடத்தி வருகின்றனர். உலகின் பயணிகள் விமான சேவையில் அதிக பெண் விமானிகளை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.
மத்திய அரசு இலக்கு: நாடு முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுக்களில் 10 கோடி பெண்கள் உள்ளனர். இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ள பெண்கள் பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் 2 கோடி பெண்களை ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டுவோராக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 15,000 பெண்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
» "வாஜ்பாய் தலைமையில் இந்தியா பெரும் பயனடைந்தது" - பிரதமர் மோடி புகழஞ்சலி
» உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலைத் தாண்டிய ரஜினியின் ‘ஜெயிலர்’
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago