தலைநகர் டெல்லியில் காற்றில் மாசடைதல் படுமோசமடைந்ததையடுத்து 6,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் காற்றில் மாசடைதலின் சுற்றுச்சூழல் நாசத்தை பெரிதும் எதிர்கொள்பவர்கள் நகரத்தின் ஏழை மக்கள் பிரிவினர்களே.
உலகின் மிக மோசமான காற்று மாசு நகரமாக மாறிய டெல்லியில் வசிக்கும் வசதி படைத்தவர்கள் முகமூடி விற்பவர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஒரு முகமூடி விலை ரூ.300 பக்கம் உள்ளது. இது குறித்து ரிக்ஷா ஓட்டுநர் சஞ்சய் என்பவர் கூறும்போது, தன்னால் கர்சீஃப் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
உயர் தொழில்நுட்ப காற்று தூய்மையாக்க முகமூடி சாதனம் வாங்குவதென்றால் இந்த ரிக்ஷா ஓட்டுநரின் ஆண்டு வருவாயை செலவழிக்க வேண்டி வரும்.
அதிக விலையுள்ள ஐரோப்பிய காற்று தூய்மையாக்கக் கருவிகள் போதாதென்று, மூக்கை மறைக்கும் உபகரணம், யோகா என்று வசதியானவர்கள் தங்கள் பாதுகாப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இவையெல்லாம் கூட காற்று மாசினால் ஏற்படும் நோய் மரணங்களைத் தடுக்க போதாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில தெருக்களில் உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அளவுகளைத் தாண்டியும் 40 மடங்கு மாசு அளவு எகிறியிருக்கிறது.
ரிக்ஷா ஓட்டுநர்கள், தெருவோர விற்பனையாளர்கள், ஆயிரக்கணக்கான வீடற்ற குடும்பங்கள் சுற்றுச்சூழல் நாசத்தின் விளைவை பெரும்பகுதி எதிர்கொண்டு வருகின்றனர். இதன் தாக்கம் குறிப்பாக குழந்தைகளின் இருதயம், மூளை, நுரையீரல் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஏழை மக்கள் திண்டாட, வசதி படைத்தோர் உயர் தொழில் நுட்ப நச்சுக்காற்று வடிகட்டிகளுக்காக சிறிய கடை ஒன்றை மொய்த்து வருகின்றனர். தீர்ந்து விட்டது என்று அவர் ஷட்டரை மூடியபோது கியூவில் காத்திருந்தவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உயர் தொழில்நுட்ப முகமூடியின் விலை ரூ.2500 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதைப்பற்றி கவலைப்படாமல் கிரிக்கெட் ஆட்டமும், தினம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் இயல்பாக இருந்து வரும் காட்சிகளும் தலைநகரில் இருந்து வருகிறது.
மேலும் சில குழுக்கள் முகமூடியெல்லாம் தேவையில்லை உடலில் நுழையும் நச்சுக்களை யோகா, பிராணாயாமம் மூலம் விரட்டுவோம் என்று சூளுரைக்கின்றனர். இவ்வகையில் நாட்டம் செலுத்தும் ஒரு ஆர்வலர் ஏ.எஃப்.பிக்குக் கூறுகையில், “நாங்கள் இந்தியர்கள், இவைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம்” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
46 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago