உள்ளூர் தீவிரவாதிகள் சரணடைய காஷ்மீரில் புதிய கொள்கை அறிமுகம்

By பீர்சதா ஆஷிக்

உள்ளூர் தீவிரவாதிகள் சரணடையும் வகையில் காஷ்மீரில் புதிய சரணடையும் கொள்கையை அரசின் சார்பில் காஷ்மீர் காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, தீவிரவாதத்தில் இணைந்துள்ள உள்ளூர் இளைஞர்கள் தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு வழக்கமான வாழ்க்கையை வாழ முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜம்மு காஷ்மீர் டிஜிபி, ''நாங்கள் உள்ளூர் இளைஞர்கள் சரணடைய ஒரு வாய்ப்பளிக்க விரும்புகிறோம். அம்மாவின் கண்ணீரைக் கண்டு மஜித் கான் திரும்ப வந்தது (லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்தவர்), ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது.

மற்ற தீவிரவாதிகளின் அன்னையர்களும் இதைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். வன்முறை இல்லாத, தொல்லைகள் அற்ற காஷ்மீருக்காகக் காத்திருக்கிறேன்'' என்றார்.

முன்னதாக சரணடையும் கொள்கை 1990-களின் முற்பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று, திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கு மட்டுமாக இருந்தது.

தற்போது வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய கொள்கையில், சரணடையும் உள்ளூர் இளைஞர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் வேலை வழங்கப்படும் என்றும் அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ முழு ஆதரவும் அளிக்கப்படும் என்றூம் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 130 உள்ளூர் தீவிரவாதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில் சோபியன் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் ஹுசைன் பட் மற்றும் புல்வாமா மாவட்டத்தின் மன்சூர் அகமது பாபா ஆகிய இரு தீவிரவாதிகளின் பெற்றோர்களும் இணையம் மூலம் தங்களின் மகன் வீடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்