அகமதாபாத்
‘பிரதமர், பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்’ பிரதமர் பதவியை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசமாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
வடக்குக் குஜராத்தில் பாலன்பூரில் சமூகவலைத்தள ஆர்வலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி
“எது செய்தாலும், மோடியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம், பிரதமர் பதவியை ஒரு போதும் மரியாதை குறைவாகப் பேச மாட்டோம். ஆனால் மோடிஜி எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமரை பற்றி மரியாதை குறைவாகப் பேசியுள்ளார். இதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். மோடி எங்களைப் பற்றி என்ன கூறினாலும் சரி நாங்கள் பிரதமர் பதவிக்கு இழுக்கு கற்பிக்கும் வகையில் வரம்பு மீற மாட்டோம்.
பிரதமர் பதவி நாட்டு மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகும். எனவே அந்தப் பதவிக்கு மரியாதை கொடுப்போம்” என்று கூறி காங்கிரஸ் ஆதரவாளர்களும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago