காப்பீடு செலுத்தாத வாகனங்கள் பறிமுதல்: ஹைதராபாத் போலீஸார் அதிரடி

By என்.மகேஷ் குமார்

ஹைதராபாத் நகரில் காப்பீடு செய்யப்படாத பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மோட்டார் வாகன சட்டம் 146/1988-ன் கீழ் 3-வது நபர் காப்பீடு அவசியம் செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்றமும் சாலை பாதுகாப்பு கருதி இதை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் இதுகுறித்து அறியாத பல வாகன ஓட்டிகள் மூன்றாவது நபர் காப்பீடு இல்லாமலேயே வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் காவல் ஆணையர் சந்தீப் ஷந்தில்யா உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் காப்பீடு செய்யப்படாத (3-வது நபர் காப்பீடு) பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் பிறகு காப்பீடு தொகை செலுத்துவதற்காக 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப் படுகிறது. காப்பீடு தொகை செலுத்திய ரசீதை காட்டிய பிறகு, வாகனங்கள் உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் ஹைதராபாத்தில் பல வாகன ஓட்டிகள் தற்போது காப்பீடு தொகையை செலுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்