இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கொண்டுவந்தார்.
தீர்மானத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அவர் பேசியதாவது: மலையாளத்தில் ‘கேரளம்’ என்ற பெயரிலும், பிற மொழிகளில் ‘கேரளா’ என்ற பெயரிலும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் ‘கேரளா’ என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் இதை ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து உடனடி பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago