பாபர் மசூதி - ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு, அயோத்தி விவகாரம் தொடர்பான ரவிசங்கரின் முயற்சிகளை ஆதித்யநாத் பாராட்டியதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
அயோத்தியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ராமர் கோயில் - பாபர் மசூதி பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடம் மூன்று தரப்பினருக்கு சொந்தமானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு அளித்தது.
இங்கு கோயில் கட்டுவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயன்று வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அன்று பேசிய ஆதித்யநாத், ''எந்த கட்டமாக இருந்தாலும் முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன. பேச்சுவார்த்தை இருக்கவேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. ஆனால் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது.
எந்த விதமான போராட்டமாக இருந்தாலும் அதைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்றைய சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago