கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கே திருப்பதி அறங்காவலர் பதவி - ஆந்திர பாஜக தலைவர் வலியுறுத்தல்

By என். மகேஷ்குமார்

அமராவதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் பதவிக் காலம் வரும் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அறங்காவலர் குழுவின் புதிய தலைவராக ஆளும் கட்சியின் திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டியை முதல்வர் ஜெகன் நியமித்துள்ளார். அவர் நாளை ஏழுமலையான் கோயிலில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் கருணாகர் ரெட்டிக்கு இப்பதவி வழங்கியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏழுமலையானை அவர் ஒருமுறை கருப்புக் கல் என்று கூறியதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறும்போது, ‘‘திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு என்பது அரசியல் கூடாரம் இல்லை. இந்து மதம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இப்பதவிக்கு வர வேண்டும். இதற்கு முன் ஜெகன் அரசு, அறங்காவலர் குழுவில் 80 பேரை இணைத்து அதனை கூடாரமாக்க முயன்றது. ஆனால், நீதிமன்ற வழக்கால் 52 பேர் நீக்கப்பட்டனர். அரசியல் ஆதாயத்திற்காக இக்குழுவில் ஜெகன் அரசு பதவிகளை வழங்குவது தெள்ளத் தெளிவாகிறது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இந்து மதம் மீது நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே அரசு நியமிக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்