வரதட்சணை புகார் வந்தால் உடனே கைது செய்வதா?- போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By எம்.சண்முகம்

வரதட்சணை புகார் பிரிவு, பெண்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது, இத்தகைய புகார் வந்தால், உடனே தன்னிச்சையாக கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்னேஷ் குமார். இவருக்கும் ஸ்வேதா கிரண் என்பவருக்கும் 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கணவர், மாமனார், மாமியார் ரூ.8 லட்சம் பணம், மாருதி கார், குளிர்சாதனப் பெட்டி, டிவி ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக ஸ்வேதா கிரண் புகார் அளித்தார்.

முன்ஜாமீன் கேட்டு அர்னேஷ் குமார் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நிராகரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றமும் மனுவை நிராகரித்ததால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் சந்திரமவுலி பிரசாத், பினாகி சந்திரகோஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:

இதுபோன்ற வரதட்சணை புகார்கள் சமீபகாலமாக பெருமளவில் அதிகரித்துள்ளது. பெண்களை துன்புறுத்துவதில் இருந்து பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட வரதட்சணை தடுப்புப் பிரிவு தற்போது தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்துவதை விட்டு, கணவன், மாமனார், மாமியாருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

பல வழக்குகளில் படுத்த படுக்கையாக உள்ள தாத்தா, பாட்டி, பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசிப்போர்கூட குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுகின்றனர்.

15 சதவீதம் மட்டுமே தண்டனை

வரதட்சணை பிரிவு வழக்குகளில் அதிகபட்சமாக 93.6 சதவீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் இதில் 15 சதவீதம் மட்டுமே தண்டனையில் முடிகிறது. வரதட்சணை புகார் கொடுத்தால் உடனே எதிர் தரப்பினரை கைது செய்வது தவறான செயல். குற்றத்தன்மை உள்ளதா என்பதை போலீஸார் ஆராய்ந்த பின்னரே கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் உறுதி செய்யப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு உத்தரவு

வரதட்சணை புகார்கள் வந்தால் தன்னிச்சையாக கைது செய்யக் கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். போலீஸார் முதலில் குற்றத்தன்மையை ஆராய்ந்து கைது செய்ய வேண்டியதன் அவசியத்தை எழுத்துமூலம் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யாத போலீஸார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.

இந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதை மாஜிஸ்திரேட் உறுதி செய்யும் முன்பு கைதுக்கான காரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால், அவர் மீது உயர்நீதிமன்றம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டிஜிபி-க்கள், உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்