செம்மரக் கடத்தலில் சீனாவைச் சேர்ந்தவர் கைது

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏர்பேடு பகுதியில் செம்மரக் கடத்தல் தொடர்பாக கடந்த 14-ம் தேதி திருப்பதி, நெல்லூர், தமிழகத்தை சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக் (எ) பாஷாவை போலீஸார் 16-ம் தேதி கைது செய்தனர். இதுகுறித்து நேற்று திருப்பதி எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி கூறியதாவது:

அப்துல் ரசாக் கொடுத்த தகவல்பேரில், திருவள்ளூர் மாவட்டம், மணலியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 14.817 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணனின் மகன் கார்த்திக்கையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி, ஏர்பேடு வனப்பகுதியில் சென்னையை சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் சீனாவைச் சேர்ந்த லீன் சிம்மடே ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு எஸ்.பி அபிஷேக் மொஹந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்