இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா படுகோன் ஆகியோரின் தலைக்கு ஹரியாணா பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் ரூ 10 கோடி அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர். இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தைத் வெளியிடத் தடை கோரி, 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.
ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப் பாடல் இருப்பதாக வதந்தி உருவானது. இதை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி முற்றிலுமாக மறுத்தார். ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார்.
ஆனால் தொடர்ந்து பத்மாவதி திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், நடிகர்களுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் காஷ்டிரிய சமூகத்தினர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோன் தலைக்கு ரூ 5 கோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில், கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஹரியாணா மாநிலம் பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுரஜ் பால் அமு கூறும்போது, “தீபிகா, சஞ்சய் லீலா பன்சாலி தலைக்கு 5 கோடி ரூபாய் அறிவித்த மீரட் இளைஞர்களுக்கு எனது வாழ்த்தை கூறிக் கொள்கிறேன். அவர்களுக்கு அறிவித்தது போல் நடந்தால் அந்த தொகை 10 ரூபாய் கோடியாக வழங்கப்பட்டு அவர்களின் குடும்பமும் பராமரிக்கப்படும். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஆதரவு அளித்து வரும் நடிகர் ரன்வீர்சிங் தனது வார்த்தைகளை திரும்ப பெறாவிட்டால் அவரது கால் உடைக்கப்படும்”என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
சுரஜ் பால் அமுவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago