மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் - 3 பேர் உயிரிழப்பு; மத்திய படைகள் மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் பெரும்பான்மை மைத்தேயி இனத்தவர்கள் பழங்குடியினர் அந்தஸ்து கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி இனத்தவர் கடந்த மே மாதம் 3-ம் தேதி நடத்திய போராட்டத்தால் அங்கு வன்முறை வெடித்தது.

கடந்த 3 மாதமாக தொடர்ந்த மோதலில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் மத்தியப் படைகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள உகா தம்பக் கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தீவிர வாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் வீட்டு காவலுக்காக வெளியில் படுத்திருந்த தந்தை, மகன் மற்றும் பக்கத்து வீட்டு நபர் என 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ.,வும், முதல்வர் பிரேன் சிங்கின் மருமகனுமான ராஜ்குமார் இமா சிங் கூறியதாவது: விஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பில் உள்ள குறைபாடே காரணம். அங்கு துணை ராணுவப் படையினர் கவனக் குறைவாக இருந்துள்ளனர். அதனால்தான் தீவிரவாதிகள் வேறுமாவட்டத்தில் இருந்து இங்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப்படையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவர்கள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்கவில்லை என்றால், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், விஷ்ணுபூர் மாவட்டத்தின் நரன்செயினா என்ற இடத்தில் உள்ள 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் தலைமையகத்தில் நேற்று காலை, ஒரு கும்பல் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றது. மேற்கு இம்பால் மாவட்டத்தில், இரு சோதனைச் சாவடிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி போலீஸ் அதிகாரி ஒருவரை கொன்றது. அங்கிருந்து ஆயுதங்களையும் கொள்ளையடித்துச் சென்றது.

கலவரத்தில் இறந்த 35 பேரின் உடல்கள் அடக்கம் செய்யும் பகுதிக்கு குகி மற்றும் ஜோமி அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை அதிரடிப் படையினர் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்