ஹரியாணா கலவரத்துக்கு பின்னால் சதி - மாநில உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியாணா மதக் கலவரத்துக்கு பின்னால் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஎச்பி ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறி, அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் கலவரம் தொடர்பாக ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது: நூ கலவரத்துக்குப் பின்னால்மிகப் பெரிய சதி உள்ளது. வன்முறையாளர்கள் கோயில்களை அடுத்துள்ள குன்றுகள் மீது ஏறிகாத்திருந்தனர். அவர்கள் கையில்லத்தி இருந்துள்ளது. மேலும் அங்கிருந்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள் ளனர். கட்டிடங்களின் மேல் தளங்களில் கற்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் நடந்திருக்க முடியாது. நாங்கள் தகவல்களை சேகரித்து வருகிறோம். கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கலவரங்கள் தொடர்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். சுமார் 80 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். தேவைப்படும்போது நாங்கள் புல்டோசர் பயன்படுத்துவோம்.

குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது. வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அதற்கான விளைவை அனுபவிக்க வேண்டும். பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து சேதத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கலவரம் தொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலங்களை போலீஸார் பதிவு செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். வன்முறை காட்சிகளை படம் பிடித்த பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் அவற்றை போலீஸாரிடம் அளித்து விசாரணைக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அனில் விஜ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்