திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வரும் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் தாயார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மும்முரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், ஆகம விதிகளின்படி, நேற்று ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வாசனை திரவியங்களால் கோயிலை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மஞ்சள், குங்குமம், பன்னீர், பச்சை கற்பூரம் போன்றவற்றால் கோயிலின் அனைத்து சன்னதிகள், சுவர்கள், விமான கோபுரம், கொடிமரம், பலிபீடம் போன்றவை சுத்தப்படுத்தப்பட்டன.
இதையொட்டி நேற்று மதியம் வரை பக்தர்கள் தாயாரின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் சர்வ தரிசனம் தொடங்கியது. ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி காரணமாக நேற்று அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago