லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மீது நாய்களை ஏவியதால் அதிர்ச்சி

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றபோது நாய்களை ஏவிவிட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் சர்வே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி நாராயணா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவருக்கு சொந்தமான 17 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்த சென்றபோது, அதிகாரிகள் மீது லட்சுமி நாராயணாவின் மகன் நாய்களை ஏவி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லட்சுமி நாராயணாவுக்கு 20-க்கும் அதிகமான அடுக்குமாடி கட்டிடங்கள், நகைகள் என கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்