கர்நாடகாவில் ஃபாக்ஸ்கான் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு: தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அம்மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று கூறியதாவது: தைவானைச் சேர்ந்த மொபைல்போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான், கர்நாடகாவில் 2 தொழிற்சாலைகளை அமைக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. முதல் தொழிற்சாலை 240 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) முதலீட்டில் அமைய இருக்கிறது. 2-வது தொழிற்சாலை 350 மில்லியன் டாலர் (ரூ.300 கோடி) முதலீட்டில் அமைய உள்ளது. இந்த தொழிற்சாலையில் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இது தொடர்பாக நானும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு உடன் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் பெங்களூரு ஊரகம் மற்றும் தும்கூரில் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE