தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் | பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மூத்த நடிகைகள் விஜயசாந்தி மற்றும் ஜெயசுதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தெலங்கானாவில் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே யார் ஆட்சியை பிடிப்பது எனும் போட்டி கடுமையாக உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தற்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்கி, அக்கூட்டணி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலங்கானாவில் இவர் மீதும், இவரது ஆட்சி மீதும் சற்று அதிருப்தி நிலவி வருகிறது. என்றாலும், இவருக்கு எம்ஐஎம் கட்சி மறைமுகமாக ஆதரவு தருவதாலும், தெலங்கானாவில் முஸ்லிம்களின் வாக்கு அதிகம் இருப்பதாலும், சந்திரசேகர ராவே 3-வது முறையாக முதல்வராக ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது.

ஆனால், தெலங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து, இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், 46 இடங்களில் வெற்றி பெற்று ஹைதராபாத்தில் 2-வது செல்வாக்கு மிக்க கட்சியாக பாஜக தன்னை வெளிப்படுத்தி கொண்டது. காங்கிரஸ் தான் தனது எதிரி என்பதை இதன் மூலம் சந்திரசேகர ராவ் மாற்றி கொண்டு, பாஜகவை குறிவைக்க தொடங்கினார்.

ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரஸாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பாஜகவை வீழ்ச்சி அடைய செய்து, காங்கிரஸ் வெற்றி பெற்றதால், தெலங்கானா காங்கிரஸாருக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது. இம்முறை கண்டிப்பாக தெலங்கானாவையும் நாம் தான் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டி கூறும் அளவிற்கு சென்று விட்டது.

இந்நிலையில், பாஜக, தெலங்கானா தலைமையை மாற்றியது. மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய்க்கு பதில், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை தெலங்கானா மாநில தலைவராக அறிவித்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆகர்ஷ் தெலங்கானா எனும் திட்டத்தின் கீழ் முக்கிய பிரபலங்களை பாஜகவில் இழுக்கும் படலம் தொடங்கி விட்டது. இந்நிலையில்தான் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதியிலும் இம்முறை பாஜக சார்பில் போட்டியிட உள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி அம்பர் பேட்டை தொகுதியில் போட்டிடுகிறார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 பேரை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. 2-ம் கட்டமாக 45 பேர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்