புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத் தின் 22-வது கூட்டம் வருகிற வரும் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.
22-வது கூட்டம்: கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
4 மாநிலங்களுக்கு அழைப்பு: இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை செயலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூலை வரை பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
கர்நாடக அரசின் தரப்பில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த இருப்பதாகவும் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago