நந்தி விருது வழங்கும் விவகாரத்தில் அரசு மீது சாதி சாயம் பூசுவது சரியல்ல என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரைப்படத் துறையினரை கவுரவிக்கும் வகையில் ஆந்திர அரசு சார்பில் ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2014, 15, 16 ஆகிய 3 ஆண்டுகளுக்கு நந்தி விருதுக்கு தேர்வான சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. விரைவில் விருது வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்படுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த பலர் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, தெலுங்கு திரைப்பட உலகில் சர்ச்சை எழுந்துள்ளது. சிரஞ்சீவிக்கு தொடர்புடைய அவரது குடும்பத்தினருக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இதுகுறித்து நேற்று கூறும்போது, “நந்தி விருது விவகாரத்தில் இது போன்ற பிரச்சினை எழும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. கலைஞர்களுக்கு விருது வழங்கும் விவகாரத்தில் சாதி பிரச்சினையை எழுப்புவதா? இதில் கூட யாராவது அரசியல் செய்வார்களா? நந்தி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய தனிக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தான் பட்டியலை இறுதி செய்தது. அப்படி இருக்கும்போது, அரசு எப்படி இதில் தலையிட முடியும்? ஆனால் எதிர்க்கட்சியினரும் திரையுலகை சேர்ந்த சிலரும் இதுகுறித்து பேசுவது வேதனையளிக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago