ஹரியாணா காங். எம்எல்ஏ ரூ.107 கோடி மோசடி: அமலாக்கத் துறை தகவல்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: கடந்த 2019 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் சமல்கா தொகுதியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் தரம் சிங் சோக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன்கள் சிக்கந்தர், விகாஸ் ஆகியோர் குருகிராமில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் சார்பில் குருகிராமில் செக்டார் 68 பகுதியில் புதிதாக வீடுகள் கட்டித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தினர். ஆனால் யாருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில், “கட்டுமான நிறுவனம் வீடுகள் கட்டித் தருவதாக 1,497 பேரிடம் ரூ.360 கோடி வசூல் செய்து ஏமாற்றிவிட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த 25-ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கருக்கு சொந்தமான 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தரம் சிங் மகன்களின் சாய் அய்னா பர்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, தரம் சிங் சோக்கர் குடும்பத்தினரால் புதிதாக தொடங்கப்பட்ட மஹிரா இன்பராடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.107 கோடி முறைகேடாக பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர மேலும் பல்வேறு பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் அரங்கேறி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹிரா இன்பராடெக் நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் எம்எல்ஏ தரம்சிங் சோக்கருக்கு சொந்தமான சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.14.5 லட்சம் ரொக்க பணம், ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எம்எல்ஏ தரம்சிங் சோக்கருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவரும் அவரது 2 மகன்களும் தலைமறைவாகி விட்டனர். இருவரையும் தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தன.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள எம்எல்ஏ தரம்சிங் சோக்கர், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்