தலைநகர் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் சிங்கப்பூருக்கு சுற்றுலா: ஆந்திர மாநில அரசு அனுப்பி வைத்தது

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவின் தலைநகர் உரு வாக தாமாக முன்வந்து நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளை ஆந்திர அரசு சிங்கப்பூருக்கு சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர், நிரந்தர தலைநகர் உருவாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுமக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும், பல்வேறு அமைப்பினரிடமும், கருத்து கணிப்பு நடத்தினார். இறுதியில் மாநிலத்தின் மையத்தில் விஜயவாடா-குண்டூர் இடையே தலைநகரம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நிலம் வழங்க வேண்டி அப்பகுதி விவசாயிகளிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. முதலில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின்னர் ஒருவர் பின் ஒருவராக தங்களது விவசாய நிலங்களை அரசுக்கு கொடுக்க முன் வந்தனர். இதன்மூலம் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் சேகரிக்கப்பட்டது. இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது. எனினும் சிலர் இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். தற்போது இந்த விவகாரம் சூடு தணிந்துவிட்டது.

சிங்கப்பூர் போன்று அமராவதியை உருவாக்க வேண்டுமென சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, ஜப்பான், சிங்கப்பூர், லண்டனில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் தலைநகரின் வடிவமைப்பை கோரினார். பலமுறை வரைபடங்கள் வரையறுக்கப்பட்டு, தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது.

இதற்குள் அமராவதி பகுதியில் தற்காலிக சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகங்களும் நிர்மானிக்கப்பட்டன. தற்போது இப்பகுதியில் இருந்துதான் அரசாட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஹைதராபாத்திலிருந்து வெலுகுபுடி பகுதிக்கு குடியேறிவிட்டார். அமராவதிக்கு நிலம் தந்து உதவிய விவசாயிகளுக்கு, சிங்கப்பூரை காண்பிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்பினார். இதற்காக மொத்தம் 124 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல்கட்டமாக 34 விவசாயிகளை சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில் நேற்று முன்தினம் காலை அமராவதியிலிருந்து சொகுசு பஸ் மூலம் 34 விவசாயிகள் ஹைதராபாத் விமான நிலையம் புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து அவர்கள் சிங்கப்பூர் சென்றனர். இவர்கள் 4 நாட்கள் வரை சிங்கப்பூரில் தங்கி சுற்றிப்பார்க்க உள்ளனர். இதற்காக தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஆந்திர அரசு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்