அமலாக்கத் துறையால் 3 ஆண்டுகளில் 12,233 வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் 3,110 பணமோசடி வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது என்றும், மொத்தம் 12,233 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துபூர்வ பதிலை அளித்துள்ளார். அதில், கடந்த 3 ஆண்டுகளில் அமலாக்கத் துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 3,110 வழக்குகளை பதிவு செய்துள்ளது; அன்னியச் செலாவணி மீறல்கள் குறித்து விசாரிக்க 12,000 புகார்களை பதிவு செய்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 981, 2021-22 இல் 1,180, 2022-23 ஆம் ஆண்டில் 949. மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த பணமோசடி வழக்குகளின் எண்ணிக்கை 3,110. இதேபோல், அன்னியச் செலாவணி மீறல்கள் குறித்து விசாரிக்க 2020-21ல் 2,747 வழக்குகளையும், 2021-22ல் 5,313 வழக்குகளையும், 2022-23ல் 4,173 வழக்குகளையும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. ஆக மொத்தம் 12,233 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE