புதுடெல்லி: ராஜீவ் காந்தி இறப்புக்குப்பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என ஹரியாணா பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது ஹரியாணா மாநில பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது தலைநகர் டெல்லியை பார்க்க வேண்டும் என்ற அந்த பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற அவர்களுக்கு தங்கள் வீட்டில் விருந்தளித்தார் ராகுல். அப்போது, ராகுல்,சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் ஹரியாணா பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினர். இந்த வீடியோ காட்சியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே பகிர்ந்துள்ளார்.
அதில் பெண் விவசாயி ஒருவர்,‘‘ராஜீவ் இறப்புக்குப் பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள்?’’ என சோனியாவிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சோனியா, ‘‘மிகுந்த வருத்தமாக இருந்தது’’ என கூறினார். அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை.
பிரியங்கா பதில்: உடனே அருகில் இருந்த பிரியங்கா, ‘பல நாட்களாக சோனியா சாப்பிடவில்லை, தண்ணீர் குடிக்கவில்லை’’ என்றார். மற்றொரு பெண் கூறுகையில், ‘‘சோனியா பல சிரமங்களை சந்தித்திருப்பார். அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்றார். இந்த பதிலுக்கு சோனியா தலையசைக்கும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
» டேட்டா ஸ்டோரி| இந்தியாவும் அதன் மாநிலங்களும்: ஸ்டார்ட் அப்
» திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்
இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள சுப்ரியா, ‘‘21-வது வயதில் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகி, இந்த நாட்டின் மருமகளாகி 55 ஆண்டுகள் இங்கு வாழ்ந்துள்ளார். ராஜீவ் காந்தியின் மனைவியாக 23 ஆண்டுகள் கழித்தவர், அவர் இல்லாமல் 32 ஆண்டு காலம் கஷ்டப்பட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து, எப்படி ஒருவரால் இவ்வளவு கண்ணியத்துடனும், மிகுந்த அன்புடனும், வேதனையுடனும் வாழ முடியும் என நினைத்து பார்க்கிறேன். நாட்டு மக்களின் நன்மையை பற்றி மட்டுமே பேசும் சோனியா மிகுந்த அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் எப்படி செயல்படுகிறார் என வியக்கிறேன். இந்த நாடு எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறது, உங்கள் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago