புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் இண்டியா டிவி செய்தி சேனல் மற்றும் சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து மக்களவைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தின. கருத்து கணிப்பு முடிவுகளில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது மக்களவையில் பாஜகவுக்கு 303 எம்பிக்கள் உள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பலம் குறையக்கூடும். அந்த கட்சி 290 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும்.
குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 73-ல் வெற்றிபெறும். குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.
» டேட்டா ஸ்டோரி| இந்தியாவும் அதன் மாநிலங்களும்: ஸ்டார்ட் அப்
» திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் 318 தொகுதிகளைக் கைப்பற்றி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும்.
இண்டியா கூட்டணி - 175: இண்டியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் வரும் மக்களவைத் தேர்தலில் 66 தொகுதிகளைக் கைப்பற்றும். இந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கு தற்போது 22 எம்பிக்கள் உள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் 29 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக 19, ராஷ்டிரிய ஜனதா தளம் 7, ஐக்கிய ஜனதா தளம் 7, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு 11, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் பிரிவு 4, இடது முன்னணி 8 உட்பட இண்டியா கூட்டணி 175 தொகுதிகளைக் கைப்பற்றும்.
மாநில வாரியாக நிலவரம்: உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73, இண்டியா கூட்டணி 7 தொகுதிகளைக் கைப்பற்றும். பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24, இண்டியா கூட்டணி 16 தொகுதிகளைக் கைப்பற்றும்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24, இண்டியா கூட்டணி 24-ல் வெற்றி பெறும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 9, இண்டியா கூட்டணி 30-ல் வெற்றி பெறும். மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி 12, இண்டியா கூட்டணி 30-ல் வெற்றி பெறும்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 20, இண்டியா கூட்டணி 7-ஐ கைப்பற்றும். குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு ஓரிடம்கூட கிடைக்காது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும். பாஜக கூட்டணிக்கு ஓரிடம்கூட கிடைக்காது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21, இண்டியா கூட்டணி 4-ல் வெற்றி பெறும்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி, இண்டியா கூட்டணிக்கு ஓரிடம்கூட கிடைக்காது. அந்த மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18, தெலுங்குதேசம் 7 தொகுதிகளைக் கைப்பற்றும்.
ஒடிசாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பாஜக கூட்டணி 8, பிஜு ஜனதா தளம் 13-ல் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு ஓரிடம்கூட கிடைக்காது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24, இண்டியா கூட்டணி 5-ஐ கைப்பற்றும்.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் பாஜக கூட்டணி 6, இண்டியா கூட்டணி 2, பாரத் ராஷ்டிர சமிதி 8-ல் வெற்றி பெறும். அசாமில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக கூட்டணி 12, இண்டியா கூட்டணி 1-ல் வெற்றி பெறும்.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி 7, இண்டியா கூட்டணி 4 தொகுதிகளைக் கைப்பற்றும். ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக கூட்டணி 13, இண்டியா கூட்டணி ஓரிடத்தில் வெற்றி பெறும். ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் பாஜக கூட்டணி 8, இண்டியா கூட்டணி 2 இடங்களைக் கைப்பற்றும்.
பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும். டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் பாஜக கூட்டணி 5, இண்டியா கூட்டணி 2-ல் வெற்றி பெறும். உத்தராகண்டில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும். காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் பாஜக கூட்டணி 3, இண்டியா கூட்டணி 2-ல் வெற்றி பெறும்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் பாஜக கூட்டணி 3, இண்டியா கூட்டணி ஓரிடத்தில் வெற்றி பெறும். மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும். இதர வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். கோவாவில் மொத்தமுள்ள 2 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும்.
இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago