இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் முதல் 3 இடங்களில் உ.பி., பிஹார், ஆந்திரா: கைலாஷ் சத்யார்த்தி அறக்கட்டளை ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் குழந்தைகள் கடத்தலில் உத்தரபிரதேசம், பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

கேம்ஸ் 24x7 மற்றும் கைலாஷ்சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘இந்தியாவில் குழந்தைகள் கடத்தல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. இந்தஆய்வின் அறிக்கை, ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தைமுன்னிட்டு நேற்று வெளியிடப் பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 262 மாவட்டங்களில் 2016 முதல் 2022 வரையில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் சேகரிக்கப்பட்டன. இதன்படி குழந்தைகள் கடத்தலில் உத்தரபிரதேசம், பிஹார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

டெல்லியைப் பொருத்தவரை கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குழந்தைகள் கடத்தல் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள நகரங்களில் ஜெய்ப்பூர் முதலிடத்தில் உள்ளது.

இந்த காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 13,549 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் பேர் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். 13 சதவீதம் பேர் 9 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். 2 சதவீதம் பேர் 9 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

பல்வேறு துறைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓட்டல்கள் மற்றும் தாபாக்களில் அதிக அளவில் (15.6%) குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக வாகனங்கள் அல்லது போக்குவரத்துத் துறையும் (13%), ஆடை உற்பத்தித் துறையும் (11.18%) அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தி உள்ளது தெரியவந்துள்ளது.

அதேநேரம், குழந்தைகள் கடத்தலை தடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும்தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குழந்தை கடத்தல் தொடர்பான விழிப்பு ணர்வு பிரச்சாரங்கள் நடத்துவதன் மூலம், இது தொடர்பான தகவல் வெளிவருவதுடன் கடத்தல் சம்பவங்கள் குறைந்துள்ளன. அதேநேரம், குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டம் கொண்டுவர வேண்டியதும் அவசியமாகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்