கேரள காதல் விவகாரத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ (பிஎப்ஐ) அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலாவுக்கும் (24) ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தனது மகளை மீட்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். எனவே எனது மகளை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்திருமணத்தை ரத்து செய்து, அசோகனோடு அவரது மகளை அனுப்ப உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் வரும் 27-ம் தேதி அகிலா என்ற ஹாதியா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையில் காதலித்து மணம் முடித்து, மதம் மாற்றி பாலியல் சித்ரவதை செய்ததோடு, தீவிரவாத அமைப்புக்கும் தன்னை பயன்படுத்திக் கொள்ள முயன்றதாக கேரள உயர் நீதிமன்றத்தில் இன்னொரு பெண் மனு தாக்கல் செய்தார். அதில் அவரை ஏமாற்றிய முகமது ரியாஸ், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாப்புலர் பிரன்ட் கேரள மாநில செயலாளர் அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பாப்புலர் பிரன்டின் உறுப்பினர் கிடையாது. இச்சம்பவத்தில் பாப்புலர் பிரன்ட் எந்த வகையிலும் தலையிடவில்லை. தான் ரியாஸுடன் செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறிய அதே பெண் இப்போது குற்றம் சாட்டியுள்ளார். ஹாதியா வழக்கில் தீர்ப்பு எதிராக மாறிவிடும் என்ற அச்சத்தில் இந்து அமைப்புகள் பொய் தகவல்களை பரப்புகின்றன” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago