இமயமலையில் 60 கோடி ஆண்டுக்கு முன்பிருந்த கடல்: இந்திய - ஜப்பான் ஆய்வில் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த நீர்த் துளியை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், அது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. எனில், அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்

இது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் புவி அறிவியல் மையத்தின் ஆய்வு மாணவர் பிரகாஷ் சந்திர ஆர்யா கூறியதாவது: பழமையான கடலின் ஆண்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து பெரிய விவரங்கள் தெரியவில்லை. தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் என்ன வேற்றுமை, என்ன ஒற்றுமை என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், அது புவியின் காலநிலை வரலாற்றை புரிந்துகொள்ள உதவியாக அமையும். இவ்வாறு பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்