அரசியலமைப்பில் இருந்து இந்தியா என்ற சொல்லை நீக்க பாஜக எம்பி நரேஷ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா என்ற வார்த்தையை அரசியலமைப்பு சாசனத்திலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்பி நரேஷ் பன்சால் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்பி நரேஷ் பன்சால் இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று மேலும் கூறியதாவது: பிரிட்டிஷார் பாரதத்தின் பெயரை இந்தியா என்று மாற்றினார்கள். இதனை 1-வது பிரிவின் கீழ் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாடு பாரத் என்ற பெயரில்தான் அறியப்பட்டு வந்தது. இது, நாட்டின் பண்டைய பெயர் என்பதுடன் பழங்கால சம்ஸ்கிருத நூல்களில் அதற்கான சான்றுகளும் உள்ளன.

இந்தியா என்ற பெயர் காலனித்துவ ராஜ்ஜியத்தால் வழங்கப்பட்டது. இது, இன்றளவும் அடிமைத்தனத்தின் சின்னமாக விளங்குகிறது. எனவே, இந்தியா என்ற பெயரை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிரமதர் மோடி செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் காலனித்துவத்தின் அனைத்து சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறியது கவனிக்கத்தக்கது. இவ்வாறு பன்சால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்