புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.
நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை (ஜூலை 27) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கவாய் தெரிவித்தார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் பதவியை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்றியது.
இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதியுடன் பணி நிறைவு பெறவிருந்த அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை 2023 நவம்பர் 18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகும் அவருக்கு மத்திய அரசு மூன்று முறை பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது. ‘‘இது சட்ட விரோதம். எனவே, இம்மாதத்துக்குள் புதிய இயக்குநர் அமலாக்கத் துறைக்கு நியமனம் செய்யப்பட வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஜூலை 31-ம் தேதியுடன் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago