மூத்த தலைவர்களுக்கு பதிலாக, இளம் தலைமுறையினரை கட்சியின் நிர்வாகிகளாக நியமிக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைச் (ஆர்எஸ்எஸ்) சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சியி லும் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பதவியில் இருந்துகொண்டு, ஒரே மாதிரியான முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படுவது உண்டு. வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப இவர்கள் செயல்படு வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுவதுண்டு. இத்தகைய நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் பாஜக புதிய தலைவர் அமித் ஷா இறங்கி உள்ளார்.
இது பற்றி ‘தி இந்து’விடம் அக்கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “நம் நாட்டில் இளைஞர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு, ஒத்த வயதுள்ள இளைஞர்களை கட்சி நிர்வாகிகளாக நியமிப்பதுதான் சரியாக இருக்கும் என அமித் ஷா கருதுகிறார். இதுதொடர்பாக, நாக்பூரில் வெள்ளிக்கிழமை ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி னார். இவரது யோசனைக்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டி விட்டனர்” என்றனர்.
பாஜகவின் புதிய தலைவராக சமீபத்தில் பதவி ஏற்ற அமித் ஷாவுக்கு வயது 50. மிகவும் குறைந்த வயதில் இந்தப் பதவியை ஏற்ற முதல் தலைவர் இவர்தான். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களான ராம் மஹாதேவ் மற்றும் ஷிவ் பிரகாஷ் ஆகியோரும் அமித் ஷாவின் ஒத்த வயதுள்ளவர்கள்.
இந்த வகையில், கட்சியின் இளைஞர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத்தின் இணை அமைப்பு செலாளர் சுனில் பன்ஸல், உபி பாஜகவின் பொதுச்செயலாளராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
அமித் ஷாவுடன் இணைந்து உபியில் மக்களவை தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்டவர்களில் ஆர்எஸ்எஸ் தலைவர்களான ராகேஷ் ஜெயின் மற்றும் டாக்டர் கோபால்தாஸ் ஆகியோரும் அடங்குவர். எனவே, அவர்க ளுக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவரும் பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவருமான டாக்டர் சஞ்சய் பாஸ்வானுக்கும் விரைவில் தேசிய அளவில் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே தமிழகம் உட்பட சில மாநிலங்களுக்கான புதிய தலைவர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆவதாகக் கூறப்ப டுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
23 hours ago