ஆந்திர மாநிலத்தில் 4.16 லட்சம் வாக்காளர்களின் வீட்டு எண் பூஜ்யம் - தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் புகார்

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திராவில் கடந்த மாதம் வெளியான வாக்காளர் பட்டியலில் 4.16 லட்சம் வாக்காளர்களின் வீட்டு எண் பூஜ்யம் என இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் கட்சி புகார் அளித்துள்ளது.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடை பெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 15-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்பட்டியலில் பலரது பெயர்கள் நீக்கப்பட் டுள்ளதாகவும் புகைப்படங்கள் மாறியுள்ளதாகவும் பரவலாக புகார் எழுந்துள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக மாநிலத்தின் 175 தொகுதிகளிலும் 4,16,064 வாக்காளர்களுக்கு வீட்டு எண்களாக பூஜ்ஜியம் தரப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமைச்சர் பெத்தி ரெட்டி ராமசந்திரா ரெட்டியின் புங்கனூர் தொகுதியில் 34,664 பேரின் வீட்டு எண்கள் பூஜ்யம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

99 தொகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டு எண் பூஜ்யம் தரப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் கட்சி புகார் மனு அளித்துள்ளது. உரிய விசாரணை நடத்த வேண் டும் என மனுவில் அக்கட்சி கோரியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE